வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்போது..? எப்படி..? 

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.BSL/R/2022-01

பணி: Attendent-Cum Technician Trainee (NAC)
காலியிடங்கள்: 146

பயிற்சிக்காலம்: 2 ஆண்டுகள்.

உதவித்தொகை: பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 வழங்கப்படும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,100 வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT