வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? 5008 காலியிடங்களுக்கு எஸ்பிஐ அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில்(வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில்) காலியாக உள்ள 5008 இளநிலை அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பாரத ஸ்டேட் வங்கியில்(வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில்) காலியாக உள்ள 5008 இளநிலை அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்ர எண்.CRPD/CR/2022-23/15

பணி: Junior Associate

காலியிடங்கள்: 5008

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.8.2022 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர், 2022 இல் நடைபெறும்.

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்:  டிசம்பர், 2022 இல் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும். 

தேர்வு வினாத்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் இருக்கும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  www.bank.sbi/careers என்ற முகவரியில் பதிவு செய்யவும். பதிவு செய்த பின்னர் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.09.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!

இது நல்லா இருக்கே...! “போர் நடந்தால் தேர்தல் தேவையில்லையா?” வைரலாகும் டிரம்ப்பின் விடியோ

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்!

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?

SCROLL FOR NEXT