வேலைவாய்ப்பு

ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

உலகிலேயே குறைந்த விலையில் பாக்சைட் தயாரிப்பாளராகவும் உள்ளது.

Venkatesan

மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் சுரங்கம், உலோகம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பன்முக செயல்பாடுகளைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் தேசிய அலுமினிய (நால்கோ) நிறுவனம். இந்த நிறுவனம் பாக்சைட் சுரங்கம் , அலுமினா சுத்திகரிப்பு, அலுமினியம் உருகுதல் மற்றும் வார்ப்பு , மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக செயல்பாடுகளை உள்ளடக்கிய, நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்-அலுமினா-அலுமினியம்-சக்தி வளாகங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் உலகிலேயே உலோகவியல் தர அலுமினாவை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்கிறது மற்றும் உலகிலேயே குறைந்த விலையில் பாக்சைட் தயாரிப்பாளராகவும் உள்ளது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 277 பட்டதாரி பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர எண்.10240206

பணி: Graduate Engineer Trainee

மொத்த காலியிடங்கள்: 277

பிரிவு வாரியான காலியிடங்கள்:

1. Mechanical - 127

2. Electrical - 100

3. Instrumentation - 20

4. Metallurgy - 10

5. Chemical - 13

6. Chemistry- 7

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 2.4.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பிரிவில் GATE-2023 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100. இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.4.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT