சென்னை உயர்நீதிமன்றம் Center-Center-Chennai
வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.335/2024

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: VC HOST (Technical)

காலியிடங்கள்: 75

தகுதி: கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.எஸ்சி., பிசிஏ, கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல், ஐடி, ஏஐ மற்றும் இயந்திரம் கற்றல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 22.11.2024 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT