என்எல்சி அனல்மின் நிலையம் 
வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2025 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Executive Trainee(GET)

மொத்தா காலியிடங்கள்: 167

பாட வாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் - 84

2. எலக்ட்ரிக்கல் - 48

3. சிவில் - 25

4. கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 10

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் அல்லது அதற்கு இணையான துறைகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 1.12.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30-க்குள்ளும், ஓபிசி(என்சிஎல்) பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2024 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.354, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.854 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT