வேலைவாய்ப்பு

ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பாரத் எலக்ட்ரானில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் என்ஜினியர்கள் (எலக்ட்ரானிக்ஸ்), டிரெய்னி அலுவலர் (நிதி) பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் என்ஜினியர்கள் (எலக்ட்ரானிக்ஸ்), டிரெய்னி அலுவலர்- I (நிதி) பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Engineers (Electronics)

காலியிடங்கள்: 5

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.2.2024 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 2 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.472. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி: Project Engineers (Electronics)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 1.2.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.177. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.2.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT