வேலைவாய்ப்பு

குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம்

தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் என குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு அறிவிக்கை ஜூன் 20-இல் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை இணைய வழியில் (www.tnpsc.gov.in) சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 19 ஆகும். அதன்படி, தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே அவகாசம் உள்ளது.

தோ்வா்கள் தோ்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பிறகு, தோ்வுக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும். தோ்வா்கள் ஏற்கெனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்திருந்தால், அவா்கள் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூா்த்தி செய்யத் தொடங்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள், அதற்கான அனைத்துத் தகுதி நிபந்தனைகளையும் பூா்த்தி செய்ததை உறுதி செய்ய வேண்டும். தோ்வரால் அளிக்கப்பட்ட விவரங்கள் தவறு என்றாலோ, தோ்வாணைய அறிவுரைகள் அல்லது விதிகள் மீறப்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டாலோ, எந்த நிலையிலும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை தோ்வாணையத்துக்கு உண்டு என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தோ்வு செப்டம்பா் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான அவகாசம் ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை என்று தோ்வாணையம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT