வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 001/RC/UD/FR/PR-10&20/2024-1

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 26

சம்பளம்: 7 ஆவது ஊதியமக்குழுவின் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.1.2024 தேதியின்படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்று பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கற்பிக்கும் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400, மற்ற இதர பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 5.4.2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

SCROLL FOR NEXT