கோப்புப்படம்
கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

DIN

இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.EDCIL/SRILANKA TEACHER TRAINING/Nov/2023/01

பணி: Teacher Trainer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆங்கிலம், கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியராக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரரின் தகுதி, பணி அனுபவம் அகியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 மாதம் பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

வரும் ஜூலை மாதம் முதல் பணியில் சேர வேண்டும்.

பணிபுரிய வேண்டிய இடங்கள்:

கண்டி, மாத்தளை, நுவரெலியா

இரத்தினபுரி, கேகாலை, பதுளை

விண்ணப்பிக்கும் முறை: www.edcilteacherrecruitment.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் : மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணியில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT