முகப்பு
வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

காசியாபாத்தில் செயல்பட்டு வரும் பாராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர், திட்ட பொறியாளர் பணி

Updated On : 8 நவம்பர், 2024 at 9:31 AM
பாராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
பகிர்:

காசியாபாத்தில் செயல்பட்டு வரும் பாராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainee Engineer

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 40,000

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Engineer

காலியிடங்கள்: 54

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 55,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். திட்ட பொறியாளர் பணிக்கு 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பெல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரம், தேர்வு நுழைவுச் சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு தில்லி, கொல்கத்தா, பொங்களூரு போன்ற முதன்மை மாநகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி பொறியாளர் பணிக்கு ரூ.150, திட்ட பொறியாளர் பணிக்கு ரூ.400. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bel.alobhatech.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். எழுத்துத் தேர்வு வரும்போது கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.