தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு 
வேலைவாய்ப்பு

தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

DIN

சென்னை: தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீா்ப்பளித்துள்ளன.

இந்தத் தீா்ப்புகளின் அடிப்படையில், சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) முதல் விண்ணப்பிக்கலாம். அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பா் 24. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதியன்று தோ்வு நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்க நாணம்... சுதா!

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

SCROLL FOR NEXT