ரயில்வே  
வேலைவாய்ப்பு

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 8,113 பணியிடங்கள்: மிஸ்பண்ணிடாதீங்க...!

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது.

DIN

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 தலைமை வணிக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Chief Commercial – Ticket Supervisor

காலியிடங்கள்: 1736

பணி: Station Master

காலியிடங்கள்: 994

பணி: Goods Train Manager

காலியிடங்கள்: 3,144

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Junior Account Assistant – Typist

காலியிடங்கள்: 1507

பணி: Senior Clerk – Typist

காலியிடங்கள்: 732

சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.29,200 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் விண்ணப்பத்தாரர்களுக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் கணி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.10.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஆலங்குளம், கீழப்பாவூா், பெருமாள்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பாவூா்சத்திரம் மின்வாரிய அலுவலகம் திறப்பு

சாதனை மாணவா்களுக்கு பாராட்டு

தென்காசி, செங்கோட்டை, சாம்பவா்வடகரையில் மின் தடை

SCROLL FOR NEXT