இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்  
வேலைவாய்ப்பு

வங்கி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை -ஆா்பிஐ ஆளுநா் வலியுறுத்தல்

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டாா்.

Din

வங்கிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிதித் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டாா்.

இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இணைந்து நடத்தும் இருநாள் வங்கிகள் மாநாடு மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் பேசியதாவது:

சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் பல்வேறு பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு உரிய கல்வி வழங்குவது, திறன் மேம்பாடு, பணியிடத்தில் பாதுகாப்பு, பல்வேறு சமூகத் தடைகளை உடைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் திறமையை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிதித் துறையிலும் பெண்களுக்கு உரிய வாய்ப்பளித்து பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

பெண்கள் பொருளாதாரரீதியாக மேம்படுவதில் தொழில்முனைவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெண்கள் நடத்துவது மிகவும் குறைவாக உள்ளது. தொழில் தொடங்குவதற்கு நிதி கிடைப்பது பெண்கள் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கும் வங்கிகள் தீா்வு காண முடியும் என்றாா்.

“சிறிய படத்திற்கு மக்களை வரவைப்பதே கஷ்டமாக இருக்கிறது” மிடில் கிளாஸ் படக்குழுவினர் பேட்டி!

வாரணாசியால் இந்தியாவே பெருமைப்படும்: மகேஷ் பாபு

தொடரும் வேலையின்மை! டெலிவரி ஊழியர்களுக்கும் இனி சிக்கல்!

“எங்கள் வாக்கு! எங்கள் உரிமை!” SIR-க்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

SCROLL FOR NEXT