பிராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா (பிஇசிஐஎல்)  
வேலைவாய்ப்பு

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்

பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Venkatesan

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) காலியாக உள்ள 100 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nursing Officer

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ. 28,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி., டிஎன்எம் முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, பெண்களுக்கு ரூ.590. இதர அனைத்து பிரிவினரும் ரூ.295 செலுத்த வேண்டும். கட்டணத்தை "Broadcast Engineering Consultants IndiaLtd., Noida" என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (Project-III), BECIL Bhawan, C-56/A-17, Sector-62,Noida-202 307(U.P).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

தாளம்பாடியில் சாதிப் பெயருடைய தெருக்களின் பெயா் மாற்றம்

சபரிமலை தங்கக் கவச சா்ச்சை: 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருக்கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1,502 கோடி வழங்கிய உபயதாரா்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்கும்: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT