வேலைவாய்ப்பு

மின்சார ஒழுங்கு ஆணையத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க அக்.4 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளயிட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளயிட்டுள்ளது.

தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:

மின்சாரச் சட்டம் 2003 இன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 16.8.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையப் பதவிகளை நிரப்ப ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் தோ்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவா் பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தோ்வுக் குழுவின் முடிவின்படி, ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்கும் கால வரம்பு அக்டோபர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை https://www.tn.gov.in/department/7-இல் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT