முகப்பு
தமிழ்நாடு

ஸ்டாலின் ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்! விஜய்

திமுக ஆட்சியை விஜய் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...

Updated On : 13 பிப்ரவரி 2026, 1:27 pm IST
விஜய் - Photo: TVK
பகிர்:

தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, அரசு ஊழியர்கள், மக்கள் போராட்டங்கள் குறித்து தமிழக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, அரசு ஊழியர்கள், மக்களின் போராட்டம் குறித்து விஜய் பேசியதாவது:

Advertisement

Advertisement

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அவர் எதிலெல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று நான் கூறுகிறேன். சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு என அவரது ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்.

இந்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூறினார். மக்கள் உண்மையாக சந்தோசமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்கள் எல்லாம் ஏன் நடக்கிறது?

எனக்கு தெரிந்து மக்கள் சந்தோசமாக இருந்தால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்தி கொண்டாடுகிறார்கள்.

மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சிக்கு வரும்போது பொய் கூறினீர்கள். இப்போது போகும்போதும் பொய் கூறுகிறீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 202-ல் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்றார்கள். கடந்தாண்டு 90% என்றார்கள். தற்போது 80% நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது படிப்படியாக குறைந்து 20% ஆக நிற்கும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்கிறது என்கிறார்கள். அண்ணா பல்கலை., கோவை கல்லூரி பெண்களுக்கு ஏன் அப்படி நடந்தது. போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாவது ஏன்? போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றது.

தமிழகத்துக்கு முதலில் முழுநேர டிஜிபியை நியமனம் செய்யுங்கள். அதன்பிறகாவது சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் வருகிறாதா என்பதை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

summary

Stalin's regime is out of control! TVK Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.