பெங்களூரு மெட்ரோ 
வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பயிற்சி ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பயிற்சி ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். BMRCL/HR/0004/O & M/2025

பணி: Train Operator

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ. 35,000 -82,660

வயது வரம்பு : 38-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics, Telecommunications, Electronics & communications, Electrical power System, Industrial Electronics, Mechanical போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளம் மூலம் வரும் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 9.4.2025 தேதிக்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி

General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthi Nagar, Bengaluru - 560 027.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT