நாடு முழுவதும் உள்ள ராணுவ பள்ளிகளில் (Army Public Schools) முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள்:
பணி: Post Graduate Teachers (PGT)
பணி: Trained Graduate Teachers (TGT)
பணி: Primary Teachers (PRT)
தகுதி: முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்று பி.எட் அல்லது ஆசிரியர் பணிக்குரிய டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித் தகுதியுடன் மத்திய அரசு நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (சிடெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சிடெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம், தேர்வு நேரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய முகவரி அடங்கிய அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.385 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
எழுத்துத் தேர்வு செப்டம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறும்.
தேர்வு முடிவுகள் அக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.8.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.