வேலைவாய்ப்பு

ரயில்வே குரூப் டி பணிகள்: மார்ச் 1 வரை விண்ணப்பிக்க அவகாசம்!

ரயில்வே குரூப் டி பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

DIN

ரயில்வே குரூப் டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தொழில்நுட்ப துறைகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் என்ஏசி அல்லது ஐடிஐ டிப்ளமா முடித்திருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கல்வித் தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது ஐடிஐ டிப்ளமா தோ்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் வழங்கிய தேசிய தொழில் பயில்நிலை சான்றிதழ் (என்ஏசி) ஆகியவை லெவல்-1 பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அண்மையில் தெரிவித்தது.

ரயில்வேயின் பல்வேறு துறைகளுக்கான உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகள் லெவல்-1 பணியிடங்களின்கீழ் இடம்பெறுகிறது.

இதையும் படிக்க: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிலையில், இந்தப் பணியிடங்களுக்கு 32,000-க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்ப காலம் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மார்ச் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT