வடகிழக்கு மின் உற்பத்தி கழகம் 
வேலைவாய்ப்பு

மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில்(NEEPCO) நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில்(NEEPCO) நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். NEEPCO/06/2025

பணி: Executive Trainee

காலியிடங்கள: 10

1. Finance

காலியிடங்கள் : 8

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி : சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்.

2. Hindi

காலியிடங்கள் : 2

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60.000

தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.560. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.neepco.co.in என்ற இல்ணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT