Indian Army 
வேலைவாய்ப்பு

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை வேண்டுமா?: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: 10 + 2 Technical Entry Scheme 2025 (54th Course)

காலியிடங்கள்: 90

சம்பளம்: மாதம் ரூ.56,100- 1,77,500

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகள் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2006-க்கும் 1.7.2009-க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ. தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-20. சிட்அப்ஸ்- 20, சினப்ஸ் - 8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2025-இல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு ஆண்டு, ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு ஆண்டு வழங்கப்படும். 5 ஆண்டுகள் பயிற்சி முடிந்தபின் ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2026-இல் ஆரம்பமாகும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வானது இரண்டு நிலை-I மற்றும் நிலை-II கட்டங்களாக நடைபெறும். நிலை-I தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடை பெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நிலை-II இல் உடற்தகுதித்பிடங்கதேர்வு, மருத்துவத்தகுதித் தேர்வு நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: அலகாபாத், போபால் (எம்பி), பெங்களூரு (கர்நாடகம்), கபுர்தலா (பஞ்சாப்).

விண்ணப்பிக்கும் முறை: www.join indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயதுவரம்பு சான்றிதழ், ஜேஇஇ முதன்மைத் தேர்வு-2025 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2025.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத்: 2,600 அடி உயர மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்து விபத்து: 6 பேர் பலி!

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

SCROLL FOR NEXT