வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate - II

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.33,000+20% HRA

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதி முறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் உலோகவியல், பொருள் அறிவியல், இயந்திரவியல், உற்பத்தி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படு வர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு அது பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும். குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவுத் தபால் மூலமாக 16.6.2025 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Dr. Kumaran, (Department of Metallurgical and Materials Engineering), National Institute of Technology, Trichy - 15.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

SCROLL FOR NEXT