கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 7,783

பணி: அங்கன்வாடி பணியாளா்கள்

காலியிடங்கள்: 3886

தகுதி: அங்கன்வாடி மற்றும் சிறிய அளவிலான அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் தலா ரூ.7,700 தொகுப்பூதியமாகவும், சிறிய அளவிலான அங்கன்வாடிகளில் பணியாற்ற 305 பணியாளா்களுக்கு ரூ.5,700 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

வயதுவரம்பு: 25 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 40 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.

பணி: உதவியாளா்கள்

காலியிடங்கள்: 3592

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் ரூ.4,100 தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு கழித்து சிறப்பு காலமுறை ஊதியம் அவா்களுக்கு வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 வயதுக்கு குறையாமலும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தோா், கைவிடப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினோருக்கான அதிகபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும். இருப்பினும், காலிப் பணியிடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரப்புவதற்கான அதிகாரம் பெற்றவராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் இருப்பாா்.

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செய்தித்தாள்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட https://icds.tn.gov.in/ அல்லது https://icds.tn.gov.in/icdstn இணையதளத்தில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT