நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) . 
வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

DIN

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் : 22/2024

பணி: Junior Overman (Trainee)

காலியிடங்கள்: 69

சம்பளம்: மாதம் ரூ. 31,000 - 1,00,000

தகுதி: பொறியியல் துறையில் Mining, Mining Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mining Sirdar

காலியிடங்கள்: 102

சம்பளம்: மாதம் ரூ. 26,000 - 1,10,000

தகுதி: பொறியியல் துறையில் Mining Engineering தவிர இதர பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது பிரிவினர் 30-க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் Quantitative Aptitude, Reasoning and General Awareness போன்ற பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: Junior Overman பணிக்கு ரூ.595, Mining Sirdar ரூ.486. எஸ்சி, எஸ்டி பிரிவினர் சேவைக் கட்டணமாத முறையே ரூ. 295, ரூ. 236 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2025

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT