வேலைவாய்ப்பு

வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சர்.சி.வி. ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பயிற்சி பொறியாளர் பணி

DIN

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சர்.சி.வி. ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பயிற்சி பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் : 05 / 2025

பணி: Trainee Engineer

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.31,000

தகுதி : பொறியியல் துறையில் Electrical, Electronics, Electronics & Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 23-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத்தேர்வு பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி மையத்தில் வைத்து நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rhino.rri.res.in/forms/trainee-eng-2025.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.5.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு etp2025@rrimail.rri.res.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT