மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் லக்னௌவில் செயல்பட்டு வரும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்: 1/2025
பணி: Junior Secretariat Assistant (General) - 4
பணி: Junior Secretariat Assistant (Store & Purchase) - 3
பணி: Junior Secretariat Assistant (Finance & Accounts) - 1
சம்பளம்: அனைத்து பணிகளுக்கு ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 31.3.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, தட்டச்சுத் திறன், கணினியில் பணிபுரியும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.cimap.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.