தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 
வேலைவாய்ப்பு

மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

DIN

மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர்,பைப்பிங் இன்ஜினியர், திட்டமிடல் இன்ஜினியர், டெண்டரிங் இன்ஜினியர், பைப்பிங் ஃபோர்மேன் பணிகளுக்கு பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்று மூன்று முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்ற 24 இருந்து 42 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

க்யூசி இன்ஸ்பெக்டர் (Cswip 3.1) பணிக்கு மாதம் ரூ.70,000 - 80,000, பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு ரூ.60,000 - 80,000, திட்டமிடல் இன்ஜினியர் பணிக்கு ரூ 70,000 - 84,000, டெண்டரிங் இன்ஜினியர் பணிக்கு ரூ. 70,000 - 76,000, பைப்பிங் ஃபோர்மேன் பணிக்கு ரூ.54,000 - 62,400 சம்பளம் வழங்கப்படும்.

இதேபோன்று டிஐஜி மற்று ஏஆர்சி வெல்டர்கள், சிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ.41,600-50,000 சம்பளம் வழங்கப்படும். பைப் பிட்டர் பணிக்கு மாதம் ரூ.38,000 - 50,000 வழங்கப்படும்.

எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT