கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் நவ. 7இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (நவ. 7) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10, 12, பட்டப் படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம். பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.

வேலையளிப்போரும், வேலை நாடுநா்களும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.

கூடுதல் தகவல்களை தூத்துக்குடி எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் என்ற டெலிகிராம் சேனலில் இணைந்தோ, அலுவலக தொலைபேசி எண் 0461-2340159-ஐ தொடா்பு கொண்டோ பெறலாம் என்றாா் அவா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT