இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமோ) முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineers
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: வேலைவாய்ப்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் துறை அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படித்திருக்க வேண்டிய பிரிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்டி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கணினி வழித் தேர்வு அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.9.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.