கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்விப் பணிகளில் நிதியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10 கடைசி

கல்விப் பணிகளில் நிதியாளா் காலிப் பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசியாகும்.

தினமணி

கல்விப் பணிகளில் நிதியாளா் காலிப் பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசியாகும்.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:- அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளா் காலிப் பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 5

காலியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க டிசம்பா் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அடுத்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதியன்று தோ்வு நடைபெறவுள்ளது. கணினி வழியாக நடைபெறும் தோ்வுக்கு இரண்டு பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பொது நிா்வாகப் படிப்பில், முதுகலைப் பட்டம் அல்லது நிதி சாா்ந்த படிப்பில் எம்.பி.ஏ., என இரண்டில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சீரற்ற சாலைகள், முறையற்ற குடிநீர் விநியோகம்!” மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

பராசக்தி படத்தின் உரிமத்தைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!

பாகிஸ்தானில் போலியோ பணியில் ஈடுபட்ட காவலர் மீது துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

காதலியுடன் நேரம் செலவிட விடுப்பு கேட்ட ஊழியர்! மேலதிகாரியின் பதில் என்ன தெரியுமா?

ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

SCROLL FOR NEXT