அரசுப் பணிகள்

ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தினமணி

 
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில் நிரப்பப்பட உள்ள கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு நேரடி ஆள்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்

காலியிடங்கள்: 731

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

வயது வரம்பு: 01.07.2022 தேதியின் படி கணக்கிடக்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: பி.வி.எஸ்சி மற்றும் ஏஎச் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ .150, தேர்வு கட்டணம் ரூ. 200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2022

தேர்வு நடைபெறும் தேதி: 15.03.2023 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT