ஜேஇஇ தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல் 
அரசுப் பணிகள்

டிஆர்டிஓ-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பது?

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(டிஆர்டிஓ) இல் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(டிஆர்டிஓ) இல் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CEPTAM-10/A&A

பணி: Junior Translation Officer
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Stenographer Grade-I(English)
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Stenographer Grade-II(English)
சம்பளம்: ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Administrative Assistant(English/Hindi)
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Store Assistant 'A' (Hindi/English)
சம்பளம்: 19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Assistant 'A'
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Vehicle Operator'A'
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fireman/Fire Engine Driver
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிஆர்டிஓ -ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.12.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT