அரசுப் பணிகள்

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை செவ்வாய்க்கிழமை(பிப்,28) ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர் விரைந்து விண்ணப்பிக்கவும்.

தினமணி


ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை செவ்வாய்க்கிழமை(பிப்,28) ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர் விரைந்து விண்ணப்பிக்கவும்.

பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்: 

பணி: உதவி மேலாளர்

காலியிடங்கள்: 600

தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் வங்கி நிதியியல் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும், கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023

மேலும், கூடுதல் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT