அரசுப் பணிகள்

ரூ.56,000 சம்பளத்தில் தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எம்டிஎஸ் வேலை!

தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 34 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 34 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi tasking Staff
காலியிடங்கள்: 34 (பொது-16, ஒபிசி-9, எஸ்சி-6, பொருளாதார பிற்பட்டோர்-3).
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு கல்வி நிறுவனம், அலுவலகங்களில் ஒரு ஆண்டு பல்நோக்குப் பணியாளராக (எம்டிஎஸ்) பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் இ-மெயிலில் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

கட்டணம்: ரூ.300. இதணை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.nitttrc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.nitttrc.ac.in/rec_mts.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.07.2023.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT