கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

விளையாட்டு வீரா் - வீராங்கனைகள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றவா்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி

பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றவா்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேசம், தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரா் - வீராங்கனைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் அக்.31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலோ அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்திலோ விண்ணப்பம் செய்யலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT