தேசியச் செய்திகள்

தில்லியில் இரு தொழிற்சாலைகளில் இன்று தீ விபத்து

DIN

தில்லியில் ஏற்படும் தொடர் தீ விபத்துக்களின் ஒரு பகுதியாக நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இரு தொழிற்சாலைகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. காலணி தயாரிப்பு தொழிற்சாலையின் 2-ஆவது தளத்தில் தீயணைக்கும் பணி நடைபெற்றபோது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதனால் 3 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், தீயை அணைக்கும் பணியில் மொத்தம் 36 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். தீ விபத்தில் ஏற்பட்ட பொருள்சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் அந்த தொழிற்சாலைகளில் யாரும் இல்லை என்றே அப்பகுதியினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தில்லியின் கிராரி பகுதியில் அமைந்துள்ள ஜவுளிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னம்பிக்கை தரும் சேலை...!

மீண்டு வருவாரா அதர்வா?

அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார்,உத்தவுக்கு மோடி அறிவுரை

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

SCROLL FOR NEXT