தேசியச் செய்திகள்

இரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறப்பு: இங்கல்ல ஒடிசாவில்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில மது விற்பனைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

புவனேசுவரம், கட்டாக் மற்றும் புரி ஆகிய நகரங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிச. 31-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை இந்தியத் தயாரிப்பு அன்னிய வகை மதுபானங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின் 2008-ஆம் ஆண்டு மதுவிற்பனை விதி எண் 93-ன் அடிப்படையில், பொதுமக்களின் விருப்பத்திற்காக மதுக்கடைகளைத் திறந்து வைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT