உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி பயணம்: சஞ்சய் ரௌத்
சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
சிவசேனைத் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி செல்லவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது,
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு 100-ஆவது நாளைக் குறிப்பிடும் விதமாக சிவசேனைக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மார்ச் 07-ஆம் தேதி அயோத்தி சென்று ராமர் கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார். இதில் அவருடன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சில அமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் உடனடியாக இங்கிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என சிவசேனையின் சாம்னா பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.