ஆன்மிகம்

ஸ்ரீ மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம் - புகைப்படங்கள்

DIN
முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது.
சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள், காலை 8.38 மணிக்கு, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர்.
காலை 8.38 மணிக்கு, மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து, மணக்கோலத்தில் தனி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது.
வேத, மந்திரங்கள் முழங்க காலை 8.35 மணிக்கு மேல் காலை 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
மங்கள அரசியான மீனாட்சிக்கும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கும் மகா தீபாராதனை, பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.
தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, பெங்களூரு ரோஜா, தாய்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆா்க்கிட் போன்ற 10 டன் மலா்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, பெங்களூரு ரோஜா, தாய்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆா்க்கிட் போன்ற 10 டன் மலா்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திங்கள்கிழமை திக்கு விஜயமும் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
திருக்கல்யாணத்தில் கட்டண தரிசனம் 6 ஆயிரம் பேர், கட்டணமில்லா தரிசனம் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் அமரும் வகையில் தகரப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.
மே 4ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT