சித்திரை மாதத்தை சிறப்பிக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா.சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். - -விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். - ANIமீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். - ANIமீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் 19ஆம் தேதியும், திக் விஜயம் 20ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், 22ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கள்ளழகர் எதிர் சேவையும், 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.