மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 08.35 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.பக்தர்களின் பக்தி பரவசத்திற்கு இடையே திருக்கல்யாணம் நடைபெற்றது.திருக்கல்யாண ஏப்ரல் 21, 2024 சித்திரை எட்டாம் நாள் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெற்றது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுந்தரேசுவரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி, பவளகனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக ஏப்ரல் 19ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழாவும், ஏப்ரல் 20 ம் தேதி திக்விஜய வைபவமும் நடைபெற்றது. தீர்க்க சுமங்கலி வரம் தரும் மீனாட்சியம்மன்.மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது, திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.