ரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்
ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.