சென்னையில் பூஜையுடன் ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது கண்ணிவெடி.
ட்ரீம் வாரியர்ஸின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள படம் கண்ணிவெடி.கண்ணிவெடி என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் நாயகியை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்க உள்ளார்.இப்படத்தை ட்ரீம் வாரீயர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, வி.ஜெ. ரக்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாக இது இருக்கும்.கண்ணிவெடி படப்பிடிப்பு வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.