பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வழிபாடு செய்த பிறகு சூர்யா 45 படத்துக்கான பூஜை நடைபெற்றது.
சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 என அழைக்கப்படும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்குகிறது.19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.