திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் மகுடம் வென்றார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார்.திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.மிஸஸ் வோர்ல்ட் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்.போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 63 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சர்கம் கெளஷல் கலந்து கொண்டு மகுடம் வென்றார்.