காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் ஆடி மாதம் 1ஆம் தேதி புனித நீராட வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவில் படித்துறையில் புனித நீராட தடை விதித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டது.ஐயப்பா சேவை மண்டபம், காவேரி வீதி, கந்தன் பட்டறை சாலை, பூக்கடை வீதி, தேவபுரம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்.