ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. Karad-Raju Sanadi
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வீட்டில் வைத்து வணங்குவதற்கான சிறிய சிலைகள் தயாராவது போல் வீதிகளில் வைத்து வணங்க பெரிய சிலைகளும் தயாராகி வருகின்றன.சதுரங்கக் காய்களாலான விநாயகரின் சிலை.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள்.இறுதி வடிவம் பெறும் விநாயகர் சிலை.இறுதி வடிவம் பெறும் 40 அடி உயர விநாயகர் சிலை.இறுதி வடிவம் பெறும் 6 அடி உயர விநாயகர் சிலை.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூல் ஆகிய கலவைகளை கொண்டு 2 முதல் 10 அடி வரை பல்வேறு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுள்ளன.பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள், அதிகபட்சமாக 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் முகக்கவசம் அணிந்த வந்த பள்ளி மாணவர்.