மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) அதிகாலை நடைபெற்றது.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவும், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொள்ளவும் மதுரையை நோக்கி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வந்த கள்ளழகர்.கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்களின் கோஷத்தில் தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் விதமாக பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும், அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் விண்ணை முட்டும் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் மதுரையே குலுங்க வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர்.மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.விழா கோலம் பூண்ட மதுரை மாநகரம்.