ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
மறைந்த, தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, வாலாஜா சாலையில் இருந்து அவரது நினைவிடத்துக்கு நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதலவர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.