முகப்பு
செய்திகள்

சர்கார் பேனர் கிழிப்பு

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. அரசின் நலத்திட்டங்களை அவதூறாக சித்தரிக்கும் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி, தமிழகத்தின் பல இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை முற்றுகையிட்டு அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 'சர்கார்' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் கிழிக்கப்பட்டன, கட்-அவுட்களும் உடைக்கப்பட்டன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →